முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடேங்கப்பா..!! 6 லட்சம் பேராம்..!! சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சி..!!

With more than 6 lakh people witnessing the adventure program of the Air Force held at the Chennai Marina Beach on Sunday, Limca has entered the record book.
08:59 AM Oct 07, 2024 IST | Chella
Advertisement

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை 6 லட்சத்துக்கும் அதிகமானோா் கண்டுகளித்த நிலையில், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

Advertisement

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 72 விமானங்களில் வண்ணமயமான சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கானோா் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. இதை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்பியது. இதற்காக, பொதுமக்கள் அதிகளவில் வர வேண்டுமென விமானப் படை அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், விமானப் படை சாகச நிகழ்ச்சியை சென்னை மெரினா மட்டுமின்றி, தெற்கில் கோவளம் முதல் வடக்கில் எண்ணூர் வரை கடற்கரைகளிலும், மொட்டை மாடிகளில் என 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கண்டுகளித்தனர். இந்த நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக தில்லி, பிரயாக்ராஜ், சண்டிகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த பாா்வையாளா்களின் எண்ணிக்கையிலும், விமானங்கள் எண்ணிக்கையிலும் சென்னையே பிரம்மாண்டமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் விமானப்படை தலைமைத் தளபதி அம்க்ப்ரீத் சிங் ஆகியோர் பங்கேற்று பார்வையிட்டனர்.

Read More : கள்ளக்காதலியை அரசு அதிகாரியாக நியமித்த போலீஸ் ஏட்டு..!! தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.15 கோடி அபேஸ்..!! திடுக்கிடும் தகவல்கள்..!!

Tags :
சென்னைமெரினா கடற்கரைவிமானப் படை
Advertisement
Next Article