17-வது லோக்சபா அவையில் 'முத்தலாக், சட்டப்பிரிவு 370 & நியாய சன்ஹிதா…' பிரதமர் மோடி பட்டியலிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகள்.!
பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான சனிக்கிழமை மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பாக பேசினார் .பிரதமர், தனது உரையில், தனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முடிவுகள், கொள்கைகள் மற்றும் சட்டங்களின் விரிவான பட்டியலை முன்வைத்து, "17வது மக்களவை 97% ஆக்கப்பூர்வமாக நடைபெற்றதாக தெரிவித்தார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உட்பட பல தலைமுறைகளின் நீண்ட நாள் காத்திருப்பை இந்த அரசு நிறைவேற்றி இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். பிப்ரவரி 9-ஆம் தேதியுடன் முடிவடைய எழுத பட்ஜெட் சில அரசு அலுவல்களை முடிப்பதற்காக ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைந்தது .
பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையிலிருந்து சில சிறப்பம்சங்கள் :
கடந்த ஐந்தாண்டுகள் இந்தியாவின் சீர்திருத்தம் மற்றும் செயல்பாட்டிற்கான ஆண்டாக அமைந்தது என பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த ஐந்தாண்டுகள் நாட்டில் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகியவற்றைப் பற்றியது. இந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற மாற்றங்களை நம் கண் முன்னே காணலாம். 17-வது மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மக்கள் இந்த வளர்ச்சியை கண்டுள்ளனர். மேலும் நமது நாடும் இந்த முன்னேற்றங்களை அனுபவித்து வருகிறது. இந்த ஆட்சியை மக்கள் மேலும் ஆசீர்வதிப்பார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வை பிரதமர் பாராட்டினார். சபையின் சமநிலை கெடாமல் பாரபட்சமற்ற முறையில் சபையை சிறப்பாக வழி நடத்தியதாக தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், "ஜம்மு & காஷ்மீர் மக்கள் சமூக நீதி இல்லாமல் இருந்தனர். இன்று, ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு சமூக நீதியை கொண்டு வந்ததில் நாங்கள் திருப்தி அடைகிறோம். சமூக நீதிக்கான எங்களின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பயங்கரவாதம் முள்ளாக மாறிவிட்டது, நாட்டின் நெஞ்சில் குண்டுகளை வீசியது… பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்கினோம், இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இது போன்ற வலிமையைப் பெறுவார்கள் என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.
இந்த 17ஆவது மக்களவையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 வது பிரிவு நீக்கப்பட்டது மற்றும் முத்தலாக்கிற்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டது ஆகியவை சிறப்பான தருணங்கள் என கோடிட்டு காட்டினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலத்தில் பல தலைமுறைகளின் கனமான 370 வது பிரிவு அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. நமது இந்த நடவடிக்கைக்காக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்று தெரிவித்தார்.
முத்தலாக் சட்டத்தால் பெண்கள் இந்த மாதிரியான கொடுமையை அனுபவித்தார்கள் என்று நாம் அறிவோம். பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான இந்த ஆட்சியின் 17 வது மக்களவை கூட்ட தொடர்களில் தான் பெண்களுக்கு முத்தலாக்கில் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. அவர்களது நீதியை நிலைநாட்டும் சட்டங்கள் இந்த மக்களவையில் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
75 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயர் உருவாக்கி வைத்திருந்த அடிமைச் சட்டங்களான குற்றவியல் சட்டங்களை பின்பற்றி வந்தோம். நமது வளரும் தலைமுறை நியாய சன்ஹிதா சட்டங்களின் அடிப்படையில் ஜனநாயகத்தை காப்பதற்கு இந்த மக்களவை தான் சட்டம் இயற்றியது எனக் கூறினார்.