முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நேபாளத்தில் நிலச்சரிவு | வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்!! 63 பேரின் நிலை என்ன?

At least 74 people have died and 80 others injured in rain-related incidents across Nepal over the past four weeks since the onset of the monsoon season.
08:56 AM Jul 12, 2024 IST | Mari Thangam
Advertisement

நேபாளத்தில் இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதிலிருந்து 63 பேரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Advertisement

நேபாளத்தில் கனமழை காரணமாக 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் கனமழை காரணமாக 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

மத்திய நேபாளத்தில் மடன் – அஸ்ரித் நெடுஞ்சாலையில் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தபோது மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. மண்சரிவு ஏற்பட்டதில் திரிசுலி ஆற்று வெள்ளத்தில் 2 பேருந்துகளும் அடித்துச் செல்லப்பட்டன. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகளில் ஓட்டுனர்கள் உள்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்திருந்தனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகளையும் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக சித்வானின் தலைமை மாவட்ட அதிகாரி இந்திரதேவ் யாதவ் கூறுகையில்,  ”முதற்கட்ட தகவலின்படி, இரண்டு பேருந்துகளிலும் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்தனர். அதிகாலை 3:30 மணியளவில் நிலச்சரிவு பேருந்துகளை அடித்துச் சென்றது. சம்பவ இடத்தில் நாங்கள் இருக்கிறோம், தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இடைவிடாத மழை இடையூறாக உள்ளது. காணாமல் போன பேருந்துகளைத் தேடுவதற்கான எங்கள் முயற்சிகள்,” என்று தெரிவித்தார்.

நேபாள பிரதமர் உத்தரவு:

இதுதொடர்பாக நேபாள பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “நாராயண்காத்-முகலின் சாலைப் பிரிவில் பேருந்து நிலச்சரிவில் மூழ்கியதில் சுமார் ஐந்து டஜன் பயணிகளைக் காணவில்லை மற்றும் பொருளாதார இழப்பு குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக காணாமல் போன பயணிகளை தேடி, திறம்பட மீட்க, உள்துறை நிர்வாகம் உட்பட, அரசின் அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிடுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

விமான சேவை நிறுத்தம் ;

நேபாளத்தின் சில பகுதிகளில் கடந்த வாரம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பேரிடர் அதிகாரிகள் பல நதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கிற்கான எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் எல்லையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளில் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சீரற்ற காலநிலை நிலவுவதால் காத்மாண்டுவில் இருந்து சித்வான் மாவட்டத்தில் உள்ள பரத்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம், நேபாளத்தில் நிலச்சரிவு, மின்னல், வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்ட சிக்கி 14 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more | Indian 2 Review | இந்தியன் 2 படம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்!!

Tags :
landslideNepalNepal landslideTrishuli River
Advertisement
Next Article