For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

650 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 23 பேர் பலி..!! - உத்தரகாண்டில் சோகம்

At Least 5 Killed As Bus Carrying 50 Passengers Falls Into Gorge In Uttarakhand's Almora
01:10 PM Nov 04, 2024 IST | Mari Thangam
650 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து   23 பேர் பலி       உத்தரகாண்டில் சோகம்
Advertisement

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் திங்கள்கிழமை 50 பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று மாவட்டங்களில் இருந்து போலீசார் மற்றும் SDRF இன் ஆறு குழுக்கள் சம்பவ இடத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

Advertisement

உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று காலை 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அல்மொரா மாவட்டம் மர்சுலா பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வழியாக சென்ற வாகனங்களில் பயணித்தோர் இந்த விபத்தை நேரடியாக பார்த்திருக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

இந்த பயங்கர விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  தீயணைப்புத் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு ராம்நகரில் உள்ள மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அல்மோரா மாவட்டத்தின் மார்சுலாவில் நடந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளின் உயிரிழப்புகள் குறித்த மிகவும் சோகமான செய்தி கிடைத்தது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் உள்ள உள்ளூர் நிர்வாகம் மற்றும் SDRF குழுக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல விரைவாக செயல்பட்டு வருகின்றனர். தேவைப்பட்டால், பலத்த காயமடைந்த பயணிகளை விமானத்தில் ஏற்றிச் செல்லவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" இவ்வாறு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி குறிப்பிட்டுள்ளார்.

Read more ; சென்னையில் தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு..!! 8 மாணவிகள் மயக்கம்

Tags :
Advertisement