எத்தியோப்பியாவில் நிலச்சரிவு : 150-ஐ கடந்தது பலி எண்ணிக்கை..!!
எத்தியோப்பியாவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 157 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எத்தியோப்பியாவின் மழைக் காலத்தின்போது நிலச்சரிவுகள் ஏற்படுவது பொதுவானவை. இந்த நிலச்சரிவு ஜூலையில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும். இந்நிலையில், கடந்த 21-ம் தேதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர்.நேற்று நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக இருந்தது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி 157 ஆக உயர்ந்துள்ளது.
அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோபா மண்டல தகவல் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் கூறியுள்ளார். மேலும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். உறவுகளை இழந்த மக்கள், மண்ணில் புதைந்த மக்களை மீட்க வெறும் கைகளால் சேற்றை தோண்டிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Read more ; வண்டியின் நம்பரை வைத்து இதெல்லாம் பண்ணலாமா..? வாகன ஓட்டிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!