விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்.. களமிறங்கும் ஸ்பேஸ் எக்ஸ்..!! நாடு திரும்புவது எப்போது?
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் பயணம் செய்த சக வெண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் அடுத்த ஆண்டு எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பூமி திரும்பவுள்ளனர் .
அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி பயணம் மேற்கொண்டனர். ஜூன் 5அம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இரவு 8.22 மணிக்கு வெற்றிகரமாக புறப்பட்டு, ஜூன் 6ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்.
9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தினர். பின்னர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. ஜூன் 22ஆம் தேதியே இருவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பூமி வருவது ஒத்திவைக்கப்பட்டது. ஸ்டார்லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர்.
இந்நிலையில், நாசா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் பயணம் செய்த சக வெண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் அடுத்த ஆண்டு எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பூமி திரும்பவுள்ளனர். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய 2 விண்வெளி வீரர்களும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான க்ரூ டிராகன் விண்கலம் மூலம் அழைத்தவர திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 4 பேர் பயணிக்க கூடிய விண்கலத்தில் 2 பேர் பூமியிலிருந்து புறப்பட்டு, திரும்பி வரும்போது 2 பேரையும் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; சூடான உணவுகளை உண்பவரா நீங்கள்..? ஆபத்து..!! இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!