ஆண்களே..! இந்த ராசியுடைய பெண்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.!
நம் முன்னோர்கள், ஜோதிட சாஸ்திரத்தின்படி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் அமைப்புகளை பொறுத்து 12 ராசிகளுக்கும் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளின் பலன்களையும், தனிப்பட்ட குணாதிசயங்களையும் கணித்து வைத்துள்ளனர். இதன்படி குறிப்பிட்ட ராசியுடைய பெண்கள் எந்த விஷயத்திலும் நேர்மையுடையவர்களாக இருக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவை என்னன்னா ராசியினர் என்பதை குறித்து பார்க்கலாம்.
மேஷம் - ஆன்மா மற்றும் உற்சாகத்திற்கு பெயர் பெற்ற மேஷ ராசியுடைய பெண்கள், எந்த விஷயத்திலும் அதிக ஆர்வமுடைவர்களாக இருந்து வருகின்றனர். இந்த அதிக ஆர்வத்தின் காரணமாகவே ஒரு உறவில் எளிதில் சலிப்படைந்து விடுகின்றனர். இவர்கள் ஒரு உறவில் இருந்தாலும் அந்த உறவு எளிதில் சலிப்படைவதால் நேர்மை இல்லாத செயலில் ஈடுபடுவார்கள்.
மிதுனம் - இரட்டை ஆளுமை கொண்ட மிதுனராசி பெண்கள் குடும்ப உறவில் விசுவாசமற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் சமூக தொடர்புகளை அதிகம் தேடும் நபர்களாக இருப்பதால் நேர்மையற்ற செயல்களில் ஈடுபடுவது போல தோன்ற வைக்கும்.
சிம்மம் - சூரிய கிரகத்தை ஆளுமையாக கொண்டுள்ள சிம்ம ராசியின பெண்கள் நம்பிக்கையும், அன்பையும் அதிகப்படியாக வெளிப்படுத்துவார்கள். இவர்களின் தேவையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது துணைக்கு கடினமான விஷயமாக இருப்பதால் இவர்களின் குடும்ப உறவு சுமூகமாக இருக்காது. இதனாலேயே சிம்மராசி பெண்கள் நேர்மையாற்றவர்களாக இருப்பார்கள்.
விருச்சிகம் - மர்மமான கவர்ச்சியும், தீவிரமான உணர்ச்சியையும் அதிகமாக கொண்டுள்ள விருச்சிக ராசி பெண்களை புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வருகிறது. இவர்களை புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் இவர்களின் மீது ஒருவகையான சந்தேகத்தை ஏற்படுத்த்தும். இதுவே இவர்களை நேர்மையற்றவர்களாக காட்டுகிறது.
தனுசு - சாகசக்காரர்களாகவும், ஆளுமை திறன் படைத்தவர்களாகவும் இருக்கும் தனுசு ராசியினர் சுதந்திரமானவர்களாகவும், புதிய எல்லையை அடிக்கடி தேடுபவர்களாகவும் இருந்து வருகின்றனர். இது நல்ல விஷயமாக கருதப்பட்டாலும் குடும்ப உறவுகளில் இது சிக்கலை ஏற்படுத்தும்.