For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரபரப்பு...! அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு...! இன்று மீண்டும் விசாரணை...!

09:14 AM Jan 24, 2024 IST | 1newsnationuser2
பரபரப்பு     அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு      இன்று மீண்டும் விசாரணை
Advertisement

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்தை மீறி 4.90 கோடிக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Advertisement

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், 2001-2006 அதிமுக ஆட்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அப்போது வருமானத்துக்கும் அதிகமாக ரூ.4.90 கோடி அளவுக்குசொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது 2006-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுபோலீஸாருக்கு உதவுவதற்காக, தங்களையும் மனுதாரராக சேர்க்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Tags :
Advertisement