சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024!… அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
Assembly Election Results Counting: அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 6 மணிக்கு தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் முதலமைச்சர் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 50 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 82.95 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இதேபோல், சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்ற நிலையில், 79.88 சதவிகித வாக்குகள் பதிவாகின. இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.
அதன்படி, முதலில் தபால் ஒட்டுகள் எண்ணப்பட்டு பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால், அதற்குள் புதிய அரசு பதவியேற்றுக்கொள்வது அவசியம். இதன் காரணமாகவே வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
Readmore: தலைமறைவானார் ரேவண்ணா மனைவி!… மாலைவரை வீட்டிலேயே காத்திருந்த அதிகாரிகள்!… அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?