யுனெஸ்கோ பாரம்பரிய பட்டிலில் அசாமின் 'மொய்தாம்' சேர்ப்பு!.
Assam's 'Moitham': அசாமில், 600 ஆண்டுகளுக்கு முன் அகோம் மன்னர்கள் ஆட்சியின் போது கட்டப்பட்ட மொய்தாம் எனப்படும் கல்லறைகள், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
'யுனெஸ்கோ' எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரத்துக்கான அமைப்பின் முக்கிய கூட்டம் தற்போது டில்லியில் நடந்து வருகிறது. இதில், உலகம் முழுதும் இருந்து வந்துள்ள பாரம்பரிய சின்னங்களை தேர்வு செய்வதற்கான பரிந்துரைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், அசாமின் மொய்தாம் எனப்படும் கல்லறையை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ குழு அங்கீகரித்துள்ளது. வட கிழக்கு மாநிலமான அசாமை, 600 ஆண்டுகளுக்கு முன் அகோம் வம்சத்தினர் ஆட்சி செய்தனர். அப்போது அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால், அவர்களை அடக்கம் செய்ய புதைமேடுகளை கட்டினர்; இது மொய்தாம் எனப்படுகிறது.
இந்த மொய்தாம்கள் சராய்தேயு மாவட்டத்தில் உள்ளன. இது, இந்தியாவின் பிரமிடு என அழைக்கப்படுகிறது. இந்த புதைமேடுகளின் உள்ளே உடல் வைக்கப்பட்டுள்ள அறை, அதை சுற்றி அரைகோள வடிவில் மண்ணால் எழுப்பப்பட்ட மேடு, அதன் மேல் ஆண்டுக்கு ஒரு முறை வழிபாடு நடத்துவதற்காக சிறிய செங்கல் மாடம் அமைக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் மனாஸ் தேசிய பூங்கா ஆகியவை யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Readmore: அருவியில் குளித்த சிறுவன்!. அமீபா மூளைக்காய்ச்சல் உறுதி!. கேரளாவில் மேலும் இருவர் பாதிப்பு!.