For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்!!நீரில் மூழ்கிய 470 கிராமங்கள், உயரும் பலி எண்ணிக்கை!!

As many as 26 people have died due to the floods in Assam. The situation remains dire, affecting over 1.61 lakh people across 15 districts.
01:16 PM Jun 19, 2024 IST | Mari Thangam
வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்  நீரில் மூழ்கிய 470 கிராமங்கள்  உயரும் பலி எண்ணிக்கை
Advertisement

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சுமார் 1.61 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 28-ம் தேதி முதல் அந்த மாநிலத்தில் பதிவான மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 35 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அசாம் மாநிலத்தின் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அசாமில் கனமழை பெய்து வருவதால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிஸ்வநாத் லக்கிம்பூர், ஹோஜாய், போங்கைகான், நல்பாரி, தமுல்பூர், உடல்குரி, தர்ராங், தேமாஜி, ஹைலகண்டி, கரீம்கஞ்ச், ஹைலகண்டி, கோல்பாரா, நாகோன், சிராங் மற்றும் கோக்ரஜார் ஆகிய மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சுமார் 1.61 லட்சம் மக்கள் பரிதவிப்புடன் உள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர்.

வெள்ளம் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். பல இடங்களில் சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை-வெள்ளத்தில் சிக்கி இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 470 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 54,877 விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மீட்பு படையால் மீட்கப்படும் மக்களை தங்க வைக்க 50க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அசாம் மாநில முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா வெள்ள பாதிப்புகள் குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிவராண முகாம்களின் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை தடையின்றி செய்து தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.  இந்நிலையில், அசாமில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read more ; அதிர்ச்சி..!! அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சுட்டுக்கொலை..!! இளைஞர் வெறிச்செயல்..!! நடந்தது என்ன..?

Tags :
Advertisement