வெள்ளத்தில் மூழ்கிய நிலக்கரி சுரங்கம்!. 4 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு!. தொடரும் மீட்பு பணிகள்!
Assam coal mine: அசாம் சுரங்க விபத்தில் இதுவரை 4 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஜன.6ம் தேதி இந்த சுரங்கத்திற்குள் மழை வெள்ள நீர் புகுந்தது. அப்போது சுரங்கத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்களில் சிலர் தப்பி வெளியே வந்த நிலையில் 11 பேர் அதில் சிக்கிக்கொண்டனர். தப்பி வெளியே வந்தவர்கள் சுரங்க உரிமையாளர் மற்றும் போலீசாரிடம் சுரங்க விபத்து குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து, உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையின்ர தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 8ம் தேதி சுரங்கத்தில் இருந்து தொழிலாளி நேபாளத்தைச் சேர்ந்த 38 வயதான கங்கா பகதூர் ஷ்ரேஸ்தாவின் உடல் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. நேற்று மீட்கப்பட்ட உடல்கள், உம்ராங்சோவைச் சேர்ந்த லிஜென் மாகர் (27) கோக்ரஜாரை சேர்ந்தவர் குசி மோகன் ராய், 57; மற்றும் சோனிட்பூரைச் சேர்ந்த சரத் கோயாரி, 37 என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் சுரங்கத்தில் 7 பேர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Readmore: காதுக்குள் பூச்சி சென்று விட்டால், உடனே என்ன செய்ய வேண்டும்? கட்டாயம் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்..