For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Asian Champions Trophy 2024 : மலேசியாவை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றி..!!

Asian Champions Trophy 2024: India hammers Malaysia 8-1 to enter semifinals; Raj Kumar Pal scores hat-trick
08:08 AM Sep 12, 2024 IST | Mari Thangam
asian champions trophy 2024   மலேசியாவை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றி
Advertisement

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா 8 கோல்கள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியா தற்போது ஒன்பது புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Advertisement

8-வது ஆசிய சாம்பி யன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன் பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி 16-ந் தேதியும், இறுதிப் போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.

6 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன் மோதியது.

இதில் இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ராஜ் குமார் ஹாட்ரிக் கோல் (3, 25 மற்றும் 33-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். அரஜீத் சிங் ஹூன்டால் இரு கோல்களையும் (6 மற்றும் 39-வது நிமிடங்கள்), ஜுக்ராஜ் சிங் (7-வது நிமிடம்), ஹர்மன்பிரீத் சிங் (22-வது நிமிடம்), உத்தம் சிங் (40-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

மலேசிய அணி சார்பில் 34-வது நிமிடத்தில் அகிமுல்லா அனுவார் கோல் அடித்தார். ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்திய அணி 9 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று கொரியாவுடன் மோதுகிறது. தொடர்ந்து கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை 14-ம் தேதி எதிர்கொள்கிறது.

Read more ; ஆயுஷ்மான் பாரத் திட்டம்!. மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு இலவச மருத்துவக் காப்பீடு

Tags :
Advertisement