IND vs ENG| அஸ்வின், குல்தீப் சுழலில் சுருண்ட இங்கிலாந்து அணி.! வெற்றியை நோக்கி இந்தியா.!
IND vs ENG:இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வென்ற நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளை இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறத.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோ ரூட் அதிகபட்சமாக 122 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்தியா 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. துரு ஜுரல் அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சோயப் பஷீர ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிய இங்கிலாந்து 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜாக் க்ராவ்லீ அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரையும் கைப்பற்றும் என்பதால் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடினர். இன்றைய மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 40 ரன்கள் விக்கெட்டுகள் எதுவும் இழக்கவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களுனும் ஜெய்ஸ்வால் 16 ரன்களுனும் களத்தில் உள்ளனர் . நாளை இந்திய அணி மீதி இருக்கும் 152 ரன்களையும் எடுத்து இந்தப் போட்டியை வெற்றி பெறுவதோடு தொடரையும் கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.