For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆடியோ Launch-க்கு வராத அசோக் செல்வன்..!! நீ என்ன அவ்வளவு பெரிய..!! கழுவி ஊற்றிய தயாரிப்பாளர்..!!

Producer Thirumalai, actor Ashok Selvan and actress Avantika have released music and expressed their regret and condemnation as they did not participate in the program.
10:49 AM Jul 29, 2024 IST | Chella
ஆடியோ launch க்கு வராத அசோக் செல்வன்     நீ என்ன அவ்வளவு பெரிய     கழுவி ஊற்றிய தயாரிப்பாளர்
Advertisement

சமீப காலத்தில் இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் இடையே நிறைய மனக்கசப்புகள் இருந்து வருகிறது. அந்த வகையில் போர் தொழில், ப்ளூ ஸ்டார் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் அசோக் செல்வன். இவர், ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக உருவாகி வரும் அசோக் செல்வனின் எமக்குத் தொழில் ரொமான்ஸ் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பாலாஜி கேசவன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.

Advertisement

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் திருமலை, ப்ரோமோஷனுக்கு கூட அசோக் செல்வன் வராததை கண்டித்து பேசியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் திருமலை, நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை அவந்திகா இருவருமே இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்காததால் அதனை குறித்து கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, டப்பிங் பேசுவதற்கு முன்பே அசோக் செல்வன் மீதமுள்ள தனது சம்பளத்தையும் கொடுக்குமாறு தனக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ரஜினிகாந்த், விஜய், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்கள் தங்களுடைய படங்களின் பிரமோஷனுக்காக ஓடி வருகிறார்கள். ஆனால், அசோக்செல்வன் இப்போது தான் வளர்ந்து வருகிறார். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர்கள் என்ன அடிமைகளா என்று கே. ராஜன் கேள்வி எழுப்பினர். மேலும், தயரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இல்லை என்றால் நடிகர்கள் இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த பேச்சு பல்வேறு கருத்துக்களை வலைத்தளங்களில் எழுப்பியுள்ளது.

Read More : செல்போனில் ஆபாசப் படம் பார்த்து 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன்..!! குடும்பத்தினரே உடந்தை..!!

Tags :
Advertisement