முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சகலமும் அடங்கிய சாம்பல் பூசணி..!! தாம்பத்திய வாழ்க்கைக்கு சூப்பர் ரிசல்ட்..!! இப்படி சாப்பிட்டு பாருங்க..!!

Blood in urine, blood from the lungs, and blood from the nose can be coagulated.
05:40 AM Dec 19, 2024 IST | Chella
Advertisement

பறங்கிக்காய் போன்று சாம்பல் நிறத்தில் காணப்படும் இந்த பூசணிக்காயில் அடங்கியுள்ள எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Advertisement

உடலில் அதிகம் உண்டாகும் வெப்பத்தை பூசணிக்காய் தணிக்கிறது. அதனால் இதைக் கோடைப் பூசணி என்றும் அழைக்கப்படுகிறது. சாம்பல் பூசணியின் இலைகளும், விதைகளும், பூசணியைப் போலவே முழுவதும் ஊட்டச்சத்து நிரம்பியவை. இதில் உள்ள ஊட்ட உணவுகளுக்காகவும் மருத்துவக் குணங்களுக்காவுமே பூசணியைப் பயிர் செய்கின்றனர்.

இக்காய்கறி பெண்களுக்கு ஏற்படும் வலிப்பு நோய், தலைப்பேன்கள், சிறுநீர் பிரியாமை முதலியவற்றைக் குணப்படுத்த உதவுகிறது. முடி நன்கு வளரவும், தலையில் பேன்கள் குடியேறாமல் இருக்கவும், வறண்ட முடிகள் எண்ணெய்ப் பசையுடன் காட்சியளிக்க பின் வருமாறு செய்ய வேண்டும். பூசணியின் தோலையும், விதைகளையும் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்தால் போதும், பலன் கிடைக்கும்.

இதுமட்டுமல்லாமல், கிராம் பூசணியில் கிடைக்கும் கலோரி 15 தான். இதனால் நீரிழிவு நோயாளிகளும், இதைச் சமைத்து உண்ணலாம். உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது. சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. பாலுணர்ச்சியைத் தூண்டுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகிறது. திடீரென்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் சரிசெய்கிறது. மேலும், மனத்திற்கு அமைதி ஏற்படும். உடலும் சுறுசுறுப்பாய் இருக்கப் புதுப்பிக்கப்படும்.

நன்கு பழுத்த பூசணியின் சதையை மட்டும் எடுத்துக் கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிப் போடவும். ஆறியதும் இரு தேக்கரண்டி சர்பத் சேர்த்து அருந்தவும். இது முக்கியமான மருந்தாகும். இதயம் பலகீனமாய் உள்ளவர்கள், இரத்த சோகை நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடல் உடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் இந்த மருந்தை தினமும் (ஒருவேளை) தயாரித்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

உடலின் வெப்பம் தணியவும், ஆணின் உயிரணுக்கள் அடர்த்தியுடன் வெளிப்படவும் இந்த மருந்தை அருந்த வேண்டும்.இரத்தத்தை உறையச் செய்வதில் சாம்பல் பூசணி முக்கிய இடத்தை வகிக்கிறது. பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பிறகு, அதை இடித்துப் பொடிபோலச் சாப்பிட்டால் இரத்த வாந்தி, கோழை முதலியன குணமாகும்.

மூலம், சிறுநீர் ஆகியவற்றில் வரும் இரத்தம், நுரையீரல்கள் மற்றும் மூக்கு வழியாக வரும் இரத்தம் முதலியவற்றை இறுகி உறையச் செய்ய முடியும். இதற்காகத் தோல் நீக்கிய பூசணிக்காய்த் துண்டுகளை மிக்ஸி மூலம் சாறாக மாற்றி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் போதும். இரண்டு மூன்று முறை இவ்வாறு அருந்தியதுமே இரத்தம் உறைந்து விடும். இரத்த வாந்தியின் போதும் இந்த முறையில் அருந்தலாம்.

சூடான தோசை வார்க்கும் தட்டில் பூசணியைப் பிழிய வேண்டும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அழுத்தினால் போதும். அதில் கிடைக்கும் சாற்றுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து அருந்த வேண்டும். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் வயிற்றுப் புண் முற்றிலும் குணமாகும். இந்தச் சாறு அருந்திய மூன்று மணி நேரத்திற்குப் பிறகே வேறு வகையான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். இந்த முறையில் சாப்பிட்டால் உணவுப் பாதையில் உள்ள வீக்கம் பொருமல் போன்றவையும் குணமாகும்.

இதன் விதைகள் குடல் புழுக்களை அழிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. தோல் நீக்காமல் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து இந்த விதைகளைச் சாப்பிட வேண்டும். இதன் மூலம் குடலில் உள்ள எல்லா வகையான புழுக்களும் அகன்றுவிடும். இந்த விதையில் உள்ள பழுப்பு நிற எண்ணெயும் மருத்துவக் குணம் நிரம்பியது.

Read More :விவசாயிகளே..!! இனி உங்க அக்கவுண்ட்டுக்கு ரூ.12,000 வரப்போகுது..!! மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பரிந்துரை..!!

Tags :
சாம்பல் பூசணிசிறுநீர்பூசணி
Advertisement
Next Article