For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'நான் அதிபரானால்..' போட்டிப்போட்டு வாக்குறுதிகளை குவிக்கும் ட்ரம்ப், கமலா ஹாரிஸ்..!!

As there are only two months left for the US presidential election, both of them are taking turns making many promises.
10:40 AM Sep 06, 2024 IST | Mari Thangam
 நான் அதிபரானால்    போட்டிப்போட்டு வாக்குறுதிகளை குவிக்கும் ட்ரம்ப்  கமலா ஹாரிஸ்
Advertisement

உலகில் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்குகிறார். அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

Advertisement

தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் அதிரடியாக பல வாக்குறுதிகள் இருவரும் மாறி மாறி அளித்து வருகின்றனர். குடியரசு கட்சியின் பேரணியில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப் அமெரிக்காவுக்கு அதிக குழந்தைகள் வேண்டும் என்பதால் நான் அதிபர் ஆனால் பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை இலவசமாக அளிப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். இந்த திட்டத்திற்கு தேவையான நிதி உதவியை அரசு அல்லது மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு இலட்சக்கணக்கில் செலவாகும் என்ற நிலையில் இந்த வாக்குறுதி ஓட்டு அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கமலா ஹாரீஸ் தான் வெற்றி பெற்றால், முதல் முறை வீடு வாங்குவோருக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.  இந்த வாக்குறுதியை அடுத்து யாருக்கு வெற்றி என்பது பெரும் எதிர்பார்பாக அமைந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் தான் வெற்றி பெறுவார்' என அந்நாட்டு பிரபல தேர்தல் நிபுணர் ஆலன் லிச்மேன் கணித்துள்ளார்.

Read more ; SSC‌ தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! வெளியான தேர்வு தேதி…

Tags :
Advertisement