"ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு" தாக்குதல் நடத்திய இளைஞரின் பெற்றோர் சொல்வது என்ன?
நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று அதிபர் வேட்பாளரான டிரம்ப், பிரச்சார மேடையில் பேசி கொண்டு இருந்த நிலையில், திடீரென மர்ம நபர் டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் குண்டு உரசி சென்ற நிலையில், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மேலும், இந்த தாக்குதலில், டொனால்டு டிரம்ப் காயத்துடன் தப்பிய நிலையில், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரம்ப்பை சுட்டதாக நம்பப்படும் 2 நபர்கள் சீக்ரெட் சர்வீஸ் வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அவர் பென்சில்வேனியாவின் பெத்தெல் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ட்டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட்ட இளைஞரின் குடும்பத்தினர் இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்து அவரது பெற்றோர் சிஎன்என் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ' என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அரசின் விசாரணைக்கு பின்னரே எதுவும் சொல்ல முடியும்' என தெரிவித்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸின் பெற்றோர்களான மேத்யூ மற்றும் மேரி க்ரூக்ஸ் ஆகிய இருவரும் நடத்தை ஆலோசகர்கள் ஆக உள்ளனர். தாமஸ் க்ரூக்ஸுக்கு தற்போது 20 வயது ஆகிய நிலையில் அவர் வாக்களிக்கத் தகுதி பெற்ற முதல் அதிபர் தேர்தலாக இதுவாகும்.
Read more | சூரியன் பெயர்ச்சி….அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்…. யார்? யார்?