நெருங்கும் தீபாவளி… வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!! இன்றைய நிலவரம் இதோ..
தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
அதற்கேற்ப இரண்டு மாதங்களுக்கு முன் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது. ஆனால் தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தங்கம் விலை தொடர் உயர்வை கண்டு வந்த நிலையில், இன்றைய நிலவரம் குறித்து பார்க்கலாம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400 க்கு விற்பனை. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300க்கு விற்பனையாகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1640 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்கள் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை. விலை உயர்வால் குண்டு மணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நடுத்தர குடும்பத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
Read more ; அடுத்த 10 நாட்கள் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது..!! – வெதர்மேன் அலர்ட்