கள்ளக்குறிச்சியில் தொடரும் பலி எண்ணிக்கை!! அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!!
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக இருந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நல்லிரவில் உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்..
Read more ; நிர்பந்தத்தால் விருப்ப ஓய்வா? ; முன்னால் எஸ்.பி வீடியோ வெளியிட்டு விளக்கம்!!