For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரசிகர்களின் மனதை வென்ற ஹார்ட் பீட் வெப் தொடர் நிறைவு..!! எதிர்பாராத கிளைமாக்ஸ்..!!

The series team has announced that the Heartbeat web series has come to an end and the next season will air in 2025.
02:14 PM Aug 23, 2024 IST | Mari Thangam
ரசிகர்களின் மனதை வென்ற ஹார்ட் பீட் வெப் தொடர் நிறைவு     எதிர்பாராத கிளைமாக்ஸ்
Advertisement

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், அதன் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது. இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டம் உள்ளிட்டவை மையக்கருவாக கொண்டது தான் ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில், நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விறுவிறுப்புடனும், பொழுதுபோக்கு அமசங்களுடனும் சென்றுக் கொண்டிருந்த ஹார்ட் பீட் வெப் தொடர் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. ஹார்ட் பீட் வெப் தொடர் நிறைவடைந்துள்ளதால், இத்தொடர் பார்க்கும் ரசிகர்களிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஹார்ட் பீட் வெப் தொடரின் அடுத்த சீசன் 2025 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் என்று தொடர் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவல் ஹார்ட் பீட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; அனில் அம்பானிக்கு ஆப்பு வைத்த செபி..!! இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய தடை..!!

Tags :
Advertisement