பாஜகவில் இணைகிறாரா திமுக லால்குடி எம்எல்ஏ? முட்டல் மோதலால் தீயாய் பரவும் தகவல்!
லால்குடி தொகுதி எம் எல் ஏ சவுந்தரபாண்டியனுக்கும், அமைச்சர் நேருவுக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திமுக எம்.எல்.ஏ பாஜக-வில் இணைய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கே.என்.நேரு தரப்பே உத்தரவு போடுவதாகவும், டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர் நேருவின் உறவினர்கள் தலையிட்டு எம்.எல்.ஏக்களுக்கு குடைச்சல் கொடுப்பதாவும் கூறி துறையூர், முசிறி, லால்குடி, மண்ணாச்சநல்லூர், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் திருச்சி அரசியலில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.ஆனால், வெளிப்படையாக அதனை யாருமே இதுவரை காட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
கே.என்.நேரு முதன்முதலாக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றது இதே லால்குடி தொகுதியில்தான். அந்த தொகுதிக்கு உட்பட்டுதான் அவரது சொந்த கிராமமான காணக்கிளியநல்லூரும் இருக்கிறது. தான் திருச்சியில் போட்டியிட லால்குடியில் இருந்து நகர்ந்தபோது, அந்த தொகுதிக்கு நேருவின் சாய்ஸ்சாக இருந்தது தற்போதைய எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியதான். அவரை நான்குமுறை லால்குடி தொகுதியில் வெற்றி பெற வைத்தவரும் கே.என்.நேருதான். ஆனால், எப்போதும் தான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்பது, வார்த்தைகளில் கடினம் காட்டுவது மாதிரியான தோரணையில் நேரு செயல்படுவது போன்ற காரணங்களால் 4 முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ள சவுந்தரபாண்டியனுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என அந்த தொகுதிக்குள் முணுமுணுக்கப்படுகிறது.
தொடர்ந்து லால்குடி தொகுதி எம் எல் ஏ சவுந்தரபாண்டியனுக்கும், அமைச்சர் நேருவுக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகளைல் தொடர்ந்து அவரை நேரு புறக்கணித்து வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனால் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ள அவர், மாற்று முகாமுக்கு செல்லும் யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்த பாஜக தரப்பு அவரை தங்கள் பக்கம் இழுக்க தூது அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Read more | விம்பிள்டன் டென்னிஸ் : ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் அல்காரஸ்..!!