ஆஹா.. சண்டே குறைந்த தங்கம் விலை.. நகைப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்..!! விலை என்ன தெரியுமா?
இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது. தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை.
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலையு குறைந்தது. தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்தவகையில் செப்.8 நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.53,440-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கம் கிராம் ரூ.6,680-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,135-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,080-ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.89.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.89,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Read more ; Moeen Ali | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு அறிவித்தார் மொயின் அலி..!! ரசிகர்கள் ஷாக்..