விபச்சாரமாக நடத்துறீங்க? வீட்டுக்குள் புகுந்த ஊர் மக்கள்.. தாய் மகள் மீது கொடூர தாக்குதல்..!!
தாய், மகள் மட்டும் வசித்து வரும் வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதால், விபச்சாரம் நடத்துவதாக சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் நுழைந்து இருவரையும் தாக்கி ஆடைகளை கிழித்து அவமானப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவி அருகே வடராவாடி கிராமத்தில் தாய் மகள் இருவரும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். 60 வயதான தாய்க்கு 29 வயதில் மகள் உள்ளார். இதற்கிடையே தான் சமீபத்தில் அவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இருவர் வசிக்கும் வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் வந்து சென்று உள்ளனர். இதனால் அக்கம்பக்கத்து வீட்டில் வசிப்போருக்கு விபச்சாரம் நடத்துவதாக சந்தேகம் எழுந்தது.
இதனால் அக்கம்பக்கத்தினர் ஒன்றாக சேர்ந்து அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தனர். ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் ஒரே நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்ததால் தாயும், மகளும் அதிர்ச்சியடைந்தனர். ஏன் வந்தீர்கள்? என்று அவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர்கள், வீட்டில் விபசாரம் செய்கிறீர்கள் என்று கூறி இருவர் மீதும் தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமின்றி அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை கிழித்து அவமானப்படுத்தி வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே தான் பாதிக்கப்பட்ட தாயும், மகளும் சம்பவம் குறித்து மாலமாருதி போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் புகாரை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் பெலகாவி நகர போலீஸ் கமிஷனரிடம் புகாரளித்தனர்.
Read more ; Kanguva | எதற்கு இத்தனை நெகட்டிவ் விமர்சனங்கள்.. இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா? – கொந்தளித்த ஜோதிகா