For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Post Office Savings Schemes | அஞ்சலகத்தில் இப்படி கூட திட்டங்கள் இருக்கிறதா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

As far as India is concerned, there are many types of investment schemes, but among them the most popular among the people are postal schemes.
08:48 AM Jul 03, 2024 IST | Mari Thangam
post office savings schemes   அஞ்சலகத்தில் இப்படி கூட திட்டங்கள் இருக்கிறதா  கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன
Advertisement

இந்தியாவினை பொறுத்த வரையில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அவற்றில் மக்கள் மத்தியில் இன்றும் அதிகம் விரும்பப்படும் திட்டங்கள் அஞ்சலக திட்டங்கள் தான். எனினும் இன்று வரையில் இதில் எத்தனை திட்டங்கள் உள்ளன. இதில் என்னென்ன பலன் கிடைக்கும்? எந்த திட்டம் யாருக்கு உகந்தது என பலருக்கும் தெரிவதில்லை.

Advertisement

அஞ்சலக தொடக்கம்

இந்தியாவில் முதன் முதலாக பிரிடிஷ் ஆட்சியில் 1854ம் ஆண்டு தொடங்கப்பட்ட அஞ்சலகம், ஆரம்பத்தில் ஒரு டெலிவரி மெயில் போலத் தான் தொடங்கப்பட்டது. எனினும் பின்னாளில் மக்களுக்கு நிதி சேவைகள் வழங்கவும் தொடங்கப்பட்டது. இன்று வங்கிகளுக்கு இணையாக வங்கி சேவைகள், முதலீட்டு நிறுவனங்களை விஞ்சும் அளவுக்கு முதலீட்டு திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் என பல வடிவிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.

அஞ்சலகத்தில் என்னென்ன சேமிப்பு திட்டங்கள் உள்ளன?

தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) : தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டமானது 5 வருட முதிர்வு காலத்துடன் வருகிறது, தற்போது ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை அரையாண்டுக்கு ஒருமுறை கூட்டி வழங்குகிறது, மேலும் இந்த தொகையானது முதிர்வு காலத்தின் போது செலுத்தப்படும். முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லாததால், குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 ஆக உள்ளது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) : இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. திட்டத்தின்படி 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம்.

பெண் குழந்தைகளின் பெற்றோரை ஊக்குவிக்கவும், சுகன்யா சம்ரித்தி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.6 சதவீதமாக உள்ளது. இந்தத் திட்டக் கணக்கை ஒரு பெண் குழந்தையின் பெயரில் மட்டுமே தொடங்க முடியும். பிறந்த பிறகு 10 வயது வரை இந்த திட்டத்தின் கீழ் கணக்கைத் திறக்கலாம்.30 வயதின் போது முதிர்ச்சி தொகையை பெறலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF) : பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டமானது மிக பிரபலமான அஞ்சலக திட்டங்களில் ஒன்றாகும். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் எவரும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை டெபாசிட் செய்யலாம். தற்போது, இதில் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும், இது ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது. இத்திட்டத்திற்கான வைப்புத்தொகையை மொத்தமாக அல்லது 12 தவணைகளில் கட்டலாம் மற்றும் இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) : மூத்த குடிமக்களை இலக்காகக் கொண்ட திட்டங்கள், ஐந்து வருட முதிர்வு காலத்துடன் வருகின்றன. அதிகபட்சம் ரூ.15 லட்சத்திற்கு மிகாமலும், குறைந்தபட்சம் ரூ.1000-க்கு மேலும் இத்திட்டத்தில் சேமிப்பை தொடங்கலாம். தற்போது, இதில் 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றனர். மேலும், 60 வயதுடைய தனிநபர் இத்திட்டத்தை பெறலாம். எவ்வாறாயினும், 55 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட ஒரு நபர், ஓய்வு பெற்ற அல்லது தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், உங்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் கணக்கைத் தொடங்கலாம்.

மாதாந்திர வருமானத் திட்டம் (MIP): மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி வழங்குப்படுகிறது. இதற்கு ரூ.1,500 மடங்குகளில் முதலீடு தேவை. அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்பது ஒரு அக்கவுண்டிற்கு ரூ 4.5 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கில் ரூ 9 லட்சம் என வகைப்படுத்தி உள்ளனர். அனைத்து அக்கவுண்டுளிலும் இருப்பைச் சேர்ப்பதன் மூலம் அதிகபட்ச முதலீட்டு வரம்பிற்கு உட்பட்டு எந்த தபால் அலுவலகத்திலும் எத்தனை திட்டக் கணக்குகளை வேண்டுமானாலும் நீங்கள் திறக்கலாம்.

Read more | எச்சரிக்கை..!! ரேஷன் கார்டு இருக்கா.. உடனே இதை பண்ணுங்க!! இல்லைனா அரசு நலத்திட்டங்கள் ரத்தாகிவிடும்!!

Tags :
Advertisement