சட்டசபையில் கள்ளச்சாராய விவகாரம் | கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக MLA-க்கள்!! கடும் அமளியால் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!!
தமிழ்நாடு சட்டசபையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை முன்வைத்து அண்ணா திமுக எம்.எல்.ஏக்கள் கறுப்புச் சட்டையுடன் கடும் அமளியில் ஈடுபட்டதால், அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
தமிழ்நாட்டையே பதறவைத்துள்ளது கள்ளக்குறிச்சியின் கள்ளச்சாராய விவகாரம். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ரூ10 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளது. பாஜகவும் ரூ1 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் கடைநிலை போலீசார் வரை பல்வேறு தரப்பினர் மீது தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரின் 2-வது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டசபைக்கு கறுப்பு உடை அணிந்து அதிமுக, பாமக எம்.எல்.ஏக்கள் வருகை தந்தனர்.
கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அ.தி.மு.க வினர் கோரிக்கை விடுத்தனர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி எழுதிய காகிதங்களை தூக்கி காண்பித்து இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு கண்டித்தார். அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயர் அப்பாவு அறிவுறுத்தினார்.
இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

Read more ; ‘ஹங்கர் கேம்ஸ்’ நடிகர் டொனால்ட் சதர்லேண்ட் தனது 88வது வயதில் காலமானார்!!