Arvind Kejriwal: அனுமன் கோவில் சாமி தரிசனத்திற்கு பிறகு திகார் சிறையில் சரணடைந்தார் கெஜ்ரிவால்..!
Arvind Kejriwal: உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் நேற்று (ஜூன் 1ஆம் தேதி) முடிவடைந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜூன் 2) டெல்லியில் உள்ள திகார் சிறையில் சரணடைந்தார்.
அமலாக்கத் துறை, மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்தது. இதனையடுத்து ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லியில் உள்ள திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 10 ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியததை தொடர்ந்து விடுவிக்கப்பட்டார்.
ஜூன் 1ஆம் தேதியுடன் இடக்கால் ஜாமீன் முடிவடைவதால், ஜூன் 2 ஆம் அவர் சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் கெஜ்ரிவால் தனது இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களை கேட்ட பி, ஜாமீன் நீட்டிப்பு கோறும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை வரும் ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் நேற்று (ஜூன் 1ஆம் தேதி) முடிவடைந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜூன் 2) டெல்லியில் உள்ள திகார் சிறையில் சரணடைந்தார்.
திகார் சிறையில் இன்று சரணடைவதற்கு முன்னதாக அவர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பிறகு, கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு, ரோஸ் அவென்யூ சாலையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) அலுவலகத்திற்கு சென்ற கெஜ்ரிவால், அங்கு கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடம் பேசினார். அதன் பிறகு திகார் சிறைக்கு சென்று சரணடைந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அவருடன் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருடன் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், டெல்லி அமைச்சர்கள் அதிஷி, கைலாஷ் கஹ்லோட், சவுரப் பரத்வாஜ், ராஜ்யசபா எம்.பி.க்கள் சஞ்சய் சிங், சந்தீப் பதக் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் தலைவர்கள் துர்கேஷ் பதக், ராக்கி பிர்லா, ரீனா குப்தா ஆகியோர் உடன் இருந்தனர்.
சரணடைவதற்கு முன்னதாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்த கெஜ்ரிவால், "மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், 21 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக சிறையில் இருந்து வெளியே வந்தேன். மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு மிக்க நன்றி. இன்று திகார் சென்று சரணடைவேன். மதியம் 3 மணிக்கு வீட்டில் இருந்து புறப்படுவேன். முதலில் ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து கன்னாட் பிளேசில் உள்ள ஹனுமான் கோவிலுக்கு சென்று அனுமன் ஆசி பெறுவேன். அங்கிருந்து கட்சி அலுவலகத்துக்குச் சென்று, அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.