For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜாமீனில் வெளியே வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..!! தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி..!! நீதிமன்றம் அதிரடி..!!

Arvind Kejriwal Interim Bail Plea Live Updates: Supreme Court grants interim bail to Delhi CM Arvind Kejriwal till June 1
02:54 PM May 10, 2024 IST | Chella
ஜாமீனில் வெளியே வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்     தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி     நீதிமன்றம் அதிரடி
Advertisement

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. இந்த மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கையில் முறைகேடு நிகழ்ந்ததாக அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டார்.

Advertisement

அமலாக்கத்துறையின் இந்த தொடர் கைது நடவடிக்கையால் ஆம் ஆத்மி அரசுக்கு அடுத்தடுத்து பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நாட்டின் தலைநகரின் முதலமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. அவரது கைதுக்கு நாட்டின் பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. வரும் ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், ஜூன் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டுள்ளது. இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபடவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு சரமாரியான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கடந்த 2022இல் வழக்குப்பதிவு செய்துவிட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என்ற கேள்வியை நீதிபதிகள் முன்வைத்தனர்.

Read More : மாதம் ரூ.2,80,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tags :
Advertisement