முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"அரவிந்த கெஜ்ரிவாலை பயங்கரவாதியைப் போல் நடத்துகிறார்கள்" -பஞ்சாப் முதலமைச்சர் குற்றச்சாட்டு!

03:26 PM Apr 15, 2024 IST | Mari Thangam
Advertisement

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் மிகப்பெரிய பயங்கரவாதியை போல நடத்துகிறார்கள் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.  அதன் பின் அவரது காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் இப்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,  பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மான் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்தார்.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், “சிறையில் கடும் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள்கூட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொடுக்கவில்லை. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியை பிடித்தது போல் அவரை நடத்துவது வருத்தமளிக்கிறது.  பிரதமருக்கு என்ன வேண்டும்? வெளிப்படைத்தன்மை அரசியலை தொடங்கி பாஜகவின் அரசியலுக்கு முடிவு கட்டிய நேர்மையான அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி நடத்தப்படுகிறார்.

எப்படி இருக்கிறீர்கள் என்று கெஜ்ரிவாலிடம் கேட்டதற்கு, ”என்னை விடு, பஞ்சாப்பில் எல்லாம் நன்றாக உள்ளதா?” என்று கேட்டார்.  ஏனென்றால், நாங்கள் அரசியலை பணியாக செய்கிறோம்.  நாங்கள் கெஜ்ரிவாலுடன் நிற்கிறோம்.  மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4-ஆம் தேதி,  ஆம் ஆத்மி மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாகும்” எனத் தெரிவித்தார்.

Tags :
aravindhkejrivalbhagwant mannelection2024
Advertisement
Next Article