முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ராமர் கோவில்: "டெல்லி அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை" அதிரடியாக அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்.!

04:47 PM Jan 20, 2024 IST | 1newsnationuser7
Advertisement

உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தேசமே மும்முறமாக தயாராகி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலில் வருகின்ற 22 ஆம் தேதி நண்பகல் 12:20 மணிக்கு நடைபெற இருக்கிறது.

Advertisement

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்று நடத்த இருக்கும் கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீராமரின் சிலை பிரதிஷ்டை விழாவில் அரசியல் பிரமுகர்கள் சினிமா நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 7000த்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். கூட்ட நெரிசல்கள் மற்றும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் வரவேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளை கொண்டாடுவதற்காக நாடெங்கிலும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்திருந்தது மத்திய அரசு. இதேபோன்று டெல்லியில் இருக்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது . இது தொடர்பான அறிவிப்புகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லியின் துணைநிலை ஆளுநரான வி.கே சக்சேனா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

அயோத்தியில் பிரான் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி அரசு அலுவலகங்கள் குடிமை அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்க டில்லியின் துணைநிலை ஆளுனரான வி.கே சக்சேனா உத்தரவிட்டிருப்பதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான செய்தி குறிப்பு தெரிவித்து இருக்கிறது. மேலும் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 2:30 மணி வரை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருப்பதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Arvind Khejriwaldelhi govtGovt HoldayOficial AnnouncementRam Mandhir Consecration
Advertisement
Next Article