முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"தேனியில் தினகரன் ஜெயிக்காட்டி மீசையை எடுப்பேன்" சொன்னதை செய்த 'வணக்கம் டா மாப்ள' புகழ் அருண்குமார்!!

If Dhinakaran doesn't win in Theni, he will take off his moustache
05:44 PM Jun 05, 2024 IST | Mari Thangam
Advertisement

தேனி தொகுதியில் டிடிவி தினகரன் தான் ஜெயிப்பார் என்று அன்று வீடியோ வெளியிட்ட 'வணக்கம் டா மாப்ள' புகழ் அருண்குமார், இன்று பெரியப்பா தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த இரண்டையும் ஒன்றாக்கிய எடிட் செய்த திமுக-வினர் ஷேர் செய்து வருகிறார்கள்.

Advertisement

1999ல் டிடிவி தினகரன் எம்பியாக இருந்த காலக்கட்டத்தில் நிறைய செல்வாக்குடன் இருந்தவர் என்பதால், அவர் போட்டியிட்ட தொகுதியில் எப்படியும் வெல்வார் என்று பலரும் நம்பினார்கள். அப்படித்தான் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் தான் ஜெயிப்பார் என்று 'வணக்கம் டா மாப்ள' புகழ் அருண்குமார் வீடியோ வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், தேனி தொகுதியில் டிடிவி தினகரன் தான் ஜெயிப்பார். உறுதியாக என்னால் சொல்ல முடியும். பந்தயம் வேண்டுமானாலும் கட்டுகிறேன், மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்றார்

இந்நிலையில் முடிவுகள் சாதகமாக அமையவில்லை.. தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற்றார். தேனி தொகுதியில் தங்கதமிழ்செல்வன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.டி.வி.தினகரன் 2 லட்சத்து 92 ஆயிரத்து 668 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். டி.டி.வி.தினகரனை விடவும், 2 லட்சத்து 78 ஆயிரத்து 825 வாக்குகள் அதிகம் பெற்று தங்கதமிழ்செல்வன் அபார வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இன்று வீடியோ வெளியிட்டுள்ள வணக்கம் டா மாப்ள புகழ் அருண்குமார் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வனை புகழ்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தேனியில் பெரியப்பா தங்க தமிழ்செல்வன் ஐயா வெற்றி பெற்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. சில பேர் வந்து என்னிடம் கருத்துக்கணிப்பில் அப்படி சொல்லியிருந்தீங்க என்று கேட்ருந்தீங்க.. மீசை காளியத்தா என்னை எடுக்க வைத்துவிட்டார்.

எனக்கு தங்கதமிழ்செல்வன் ஐயாவும் வேண்டும்.. டிடிவி தினகரன் அண்ணனும் வேண்டும்.. இரண்டு பேருமே தேனிக்கு நல்லது செஞ்சவங்க... அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாங்கி தர வேண்டும் என்று தங்கதமிழ்செல்வன் ஐயாவிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read more ; ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் இவ்வளவு நன்மைகளா?

Tags :
moustachethenitrending newsttv dhinakaranvanakkam da mapla
Advertisement
Next Article