அருணாச்சல பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு: சீன எல்லைப்பகுதி சாலைகள் துண்டிப்பு
அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நெடுஞ்சாலையின் பெரும் பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் சீன எல்லையை ஒட்டிய திபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலம், திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று பெய்த கனமழையின் போது தேசிய நெடுஞ்சாலை 33-ல் ஹுன்லி - அனினி இடையே பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து வெளியான வீடியோக்கள், நிலச்சரிவால் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை துண்டித்து, பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதை காண்பிக்கின்றன.
இதன் காரணமாக, வாகனங்கள் மறுபுறம் கடந்து செல்வது தடைபட்டுள்ளது. இந்த கடினமான நிலப்பரப்பின் போக்குவரத்து உயிர்நாடியாக கருதப்படும் நெடுஞ்சாலையை துண்டிக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் மக்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள திபாங் மாவட்டத்தின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (என்எச்ஐடிசிஎல்) சேதமடைந்த நெடுஞ்சாலை மற்றும் அப்பகுதிகளை சீரமைக்கும் பணிகளை துவங்கியுள்ளது.
நடிகை தமன்னாவுக்கு சம்மன்! ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரம்..!