USA | அருணாச்சலப் பிரதேச விவகாரம்.!! இந்தியாவிற்கு கை கொடுத்த அமெரிக்கா.!! சீனாவிற்கு கடும் கண்டனம்.!!
USA: அருணாச்சலப் பிரதேசத்தின் பெயர்களை மாற்றி விவகாரத்தில் அமெரிக்கா, சீனா அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் அப்போது இடங்களுக்கு சீனா பெயரிட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. சீனா அரசு தங்களது பிராந்திய உரிமைக் கோரளுக்காக ஒருதலைபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பைடன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ராணுவம் அல்லது பொதுமக்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு மூலமாக ஊடுருவுதல் அல்லது அத்துமீறல்கள் மூலமாக பிராந்திய உரிமைக் குரல்களை முன்னெடுப்பதை அமெரிக்கா ஐக்கிய நாடுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ளது. பிராந்திய உரிமை குரல்களில் ஒருதலை பட்சமான நடவடிக்கையை அமெரிக்கா எப்போதுமே விரும்பியதில்லை என அமெரிக்க வெளியுறவுத் துறையின் பிரதிநிதி ஒருவர் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் கடந்த மாதம் அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளையும் இந்தியாவாக அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்ற சீனா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சிகளை தாங்கள் தீவிரமாக நிராகரிக்கிறோம் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சில பகுதிகளுக்கு சீனா மறுபெயரிட முனைந்தது. இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முட்டாள்தனமான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளது .
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள 30 இடங்களுக்கு புதிய பெயர்களை அறிவித்த 4-வது பட்டியலை சீனா நேற்று வெளியிட்டது. மேலும் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தை திபத்தின் தெற்கு பகுதி எனவும் சீனா கூறி வருகிறது. மேலும் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின் பகுதிகள் ஜாங்னன் என்ற சீன பெயராலும் அழைக்கப்படுகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் பகுதியாக தான் இருந்தது இருக்கிறது இணையும் இருக்கும் என்று உறுதிப்பட கூறினார்.
மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நான் உங்களது வீட்டின் பெயரை மாற்றினால் அந்த வீடு எனக்கு சொந்தமாகி விடுமா என கேள்வி எழுப்பி இருக்கிறார். அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் சீனா இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது 4-வது முறையாகும். இதற்கு முன்பும் 2017 ஆம் ஆண்டு 6 இடங்களுக்கும் 2021 ஆம் வருடம் 15 இடங்களுக்கும் பெயர் மாற்றி பட்டியலை வெளியிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மூன்றாவது முறையாக 11 இடங்களுக்கு பெயர் மாற்றி புதிய பட்டியலை வெளியிட்டது சீனா. தற்போது 30 இடங்களுக்கு பெயர் மாற்றிய நான்காவது பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. சீனாவின் இது போன்ற அத்துமீறல்களுக்கு அமெரிக்கா ஐக்கிய நாடுகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.