முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தீராத நோய்களையும் தீர்க்கும் அருகம்புல் ஜூஸ்..!! கண்டிப்பா இதை டிரை பண்ணி பாருங்க..!!

If you take arugam grass, add a little turmeric, grind it, apply it on the body, and bathe after a few hours, it will cure rashes, scabies, intractable skin diseases, perspiration, eczema, mud sores, itching, and boils.
05:30 AM Dec 22, 2024 IST | Chella
Advertisement

எளிதில் யாராலும் அழிக்க முடியாத அறுகம்புல்லியின் பயன்களை நாமும் அனுபவித்தால் எந்த நோயும் நெருங்காது. தினமும் அதிகாலை வேளையில் அறுகம்புல் ஜூஸை குடிப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. வாருங்கள் இதன் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.

Advertisement

அறுகம்புல்லில் குளோரோபில், அமினோ அமிலம், கனிமம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. இவை, இரத்த சோகை, இரத்த அழுத்தம், வயிற்று புண், மலச்சிக்கல், நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி, கர்பப்பை கோளாறு போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் இயற்கை மருந்தாக திகழ்கிறது. சில சமயங்களில் திடீர் என மூக்கில் இருந்து ரத்தம் சொட்டுகின்றதா? அதற்கு அறுகம்புல் சாற்றை எடுத்து மூன்று சொட்டுவிட்டால் ரத்தம் சொட்டுவது நின்று விடும்.

அதுமட்டுமின்றி, இதன் சாறு சித்த மருத்துவத்திற்கு இன்றி அமையாத ஒன்றாகத் திகழ்கிறது. அறுகம்புல் சாற்றில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறும். அத்துடன் குழந்தைகளுக்குப் பாலிலும் கலந்து கொடுக்கலாம். நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளுக்கு அறுகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

மாதவிடாய் காலங்களில் அவதிப்படும் பெண்கள் காலையில் ஒரு டம்ளர் அறுகம் பபுல் சாற்றில் சிறிதளவு மிளகுத் தூளையும் சேர்த்துப் பருகி வந்தால் சில மாதங்களிலேயே அப்பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். அறுகம்புல்லில் இருக்கின்ற குளோரோபில் உடலில் இருக்கும் தீய நச்சுக் கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கவும், அழிக்கவும் உதவுகிறது. இதனாலேயே நமது உடலில் ஏற்படும் பல்வேறு உடல்நல கோளாறுகளை தடுத்திட இயலும். கண் எரிச்சலுக்கு ஒவ்வொரு கண்ணிலும் இரண்டு சொட்டு அறுகம்புல் சாற்றைப் பிளிந்து விட்டால் கண் எரிச்சல் நின்று விடும்.

அறுகம்புல்லை எடுத்து சிறிதளவு மஞ்சள சேர்த்து அரைத்து உடலில் பூசி சில மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வியர்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு, நீர்க் கட்டிகள் இல்லாது போகும். சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் அறுகம்புல்லை சில நாட்களுக்கு ஊற வைத்து பின்னர் வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் குளிக்கும் போது தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் உடல் வெப்பம் பித்தம் வாதம் வயிறு எரிச்சல் நெஞ்சுவலி தலைச்சூடு நீர்க்கடுப்பு மூலக்கொதி என்பன தீரும்.

ஞாபக சக்தியை விருத்திப்படுத்துவதற்கும் இதன் சாறு பயன் மிக்கது அது மட்டும் இன்றி குடற்புண்ணை ஆற்றும் உடல்வலியை நீக்கும், மலச் சிக்கல் நீங்கும், குருதிச் சோகை மற்றும் குருதி அழுத்தததையும் சீராக்கும் குருதியிலுள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும், கண் நோய் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளுக்கும் இது ஓர் சிறந்த மருத்துவப தன்மை வாய்ந்த புல் என்பதில் மிகையாகாது.

Read More : இந்த ஒரு ஜூஸ் போதும்..!! சிறுநீரக கற்கள் பிரச்சனையே வராது..!! மருத்துவர்கள் கொடுக்கும் அட்வைஸ்..!!

Tags :
அறுகம்புல்கண் எரிச்சல்ஞாபக சக்திமாதவிடாய்மூலிகை ஜூஸை
Advertisement
Next Article