For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கலைஞரின் 101-வது பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை

05:52 AM Jun 03, 2024 IST | Baskar
கலைஞரின் 101 வது பிறந்தநாள்  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை
Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார்.

Advertisement

கலைஞர் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கலைஞர் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

அதைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்கு சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மேலும் காலை 9.30 மணிக்கு சென்னை, கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும், காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதையும் செலுத்துகிறார்" என்று திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read More: சிக்கிம் சட்டசபை தேர்தல் முடிவுகள்: 32 இடங்களில் 31 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்த SKM..!

Tags :
Advertisement