முதல் பரிசு ரூ.10 லட்சம்..!! கலைஞர் 100 வினாடி வினா..!! தொடங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்..!!
திமுக மகளிர் அணி மற்றும் கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையிலும், திராவிட இயக்க வரலாற்றையும், கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையிலும் திமுக எம்பி கனிமொழி முன்னெடுப்பில் நடைபெறும் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான 2ஆம் கட்ட போட்டி இன்று (ஆகஸ்ட் 8) வாலாஜாபேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அதன்படி, வினாடி வினா போட்டி, 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேலானவர்கள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மண்டலத்தில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதல் சுற்று இணையவழி போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்றனர்.
18 வயதுக்குட்பட்ட பிரிவில் திருவண்ணாமலை அணி மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவிலும் திருவண்ணாமலை அணி வெற்றி பெற்றது. தமிழ் மொழி, இலக்கியம், திராவிட வரலாறு, கலைஞர் ஆற்றிய பணிகள் குறித்து வினாடி வினா கேள்விகளுக்கு ஆர்வத்துடன் போட்டியாளர்கள் பதில் அளித்தனர். இந்த வினாடி வினா போட்டியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தின் வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
'kalaingar100.co.in' என்ற இணையதளத்தில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி இணையவழி போட்டிகள் தொடங்கியது. முதல் சுற்று இணையவழி வினாடி வினா செப்டம்பர் 15 தொடங்கி அக்டோபர் 25 வரை நடைபெறுகிறது. 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டி மற்றும் 18 வயதிற்குப்பட்டோருக்கான போட்டிகளாக நடைபெறும். இரண்டாவது சுற்று மண்டல போட்டி 12 மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா ரூ.10 லட்சமும், இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சமும், 3ஆம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.