முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நியூஸ் க்ளிக் இணையதள நிறுவனர் கைது சட்டவிரோதம்! - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

01:54 PM May 15, 2024 IST | Mari Thangam
Advertisement

நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் பிரபீர் புரகாயஸ்தாவின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவித்து கைது நடவடிக்கையை ரத்து செய்து விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாகவும் இந்திய அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கம் என்பவரிடம் இருந்து பணம் பெற்றதாகப் புகார் எழுந்ததால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களிலும் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பத்திரிகையாளர்களிடம் இருந்து மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

அத்துடன் நியூஸ் க்ளிக்  செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிர்பீர் புர்காயஸ்தா மற்றும் அந்நிறுவனத்தை சேர்ந்த அமித் சக்கரவர்த்தி ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தேசத்துரோக வழக்கான “ஊபா” (UAPA)-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன. இந்த நடவடிக்கைக்கு “இந்தியா” கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே தமது கைது நடவடிக்கைக்கு எதிராக பிர்பீர் புர்காயஸ்தா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிர்பீர் புர்காயஸ்தாவை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை உடனே விடுதலை செய்ய அதிரடியாக உத்தரவிட்டது. 

Advertisement
Next Article