For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நடிகர் தர்ஷன் கைது விவகாரம்!. கூலிப்படை ஏவி கொலை!. வாட்ஸ் அப்பில் கிடைத்த திடுக்கிடும் தகவல்!

Shocking information has now come out about how actor Darshan executed the murder.
08:41 AM Jun 13, 2024 IST | Kokila
நடிகர் தர்ஷன் கைது விவகாரம்   கூலிப்படை ஏவி கொலை   வாட்ஸ் அப்பில் கிடைத்த திடுக்கிடும் தகவல்
Advertisement

Actor Darshan: கொலை வழக்கில் கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், எப்படி இந்த கொலையை செயல்படுத்தினார் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Advertisement

பெங்களூரு காமாட்சிபாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சுமன்னாஹள்ளி குடியிருப்பு பகுதியில் உள்ள ராஜா கால்வாய் அருகே ஆண் சடலத்தை நாய்கள் இழுத்துக் கொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த வழியாகச் சென்ற குடியிருப்பு காவலாளி அதைப் பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் நேற்று மூன்று பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், பணத்தகராறு காரணமாக அடித்துக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதிர்ச்சிகரமான பல விஷயங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, உயிரிழந்தவர் சித்ர துர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி. அவர் அங்குள்ள மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். கடந்த சனிக்கிழமை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னட திரைப்பட நடிகை பவித்ரா கௌடாவிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதோடு, சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவு செய்துள்ளார். பவித்ரா கவுடாவுக்கு தவறான செய்திகளை அனுப்புவதற்காக ரேணுகாசாமி போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார். தர்ஷனின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நடிகை, சிலர் மூலம் ரேணுகாசாமியை சிக்ரதுர்காவில் இருந்து பெங்களூரு அழைத்து வந்து சரமாரியாக அடித்துள்ளார் எனக்கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த கன்னட நடிகர் தர்ஷன், தானும் சேர்ந்து ரேணுகாசாமியை அடித்துள்ளார் (தர்ஷனும் பவித்ராவும் கணவன் மனைவி). இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைக்கண்ட அவர்கள் சடலத்தை ராஜா கால்வாய் அருகில் வீசிச் சென்றுள்ளனர்.

விசாரணையில் தெரியவந்த இந்த அதிர்ச்சிகர உண்மைகளை அடுத்து, சரணடைந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கூலிப்படை ஏவி கொலை செய்தது நடிகர் தர்ஷன்தான் என்பது காவல்துறைக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தர்ஷனை மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருந்து போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய பிரபல திரைப்பட நடிகை பவித்ரா கௌடாவை ஆர்ஆர்நகர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை பவித்ரா க, தர்ஷன் தூகுதீபா, பவன், ராகவேந்திரா, நந்தீஷ், வினய், நாகராஜு, லட்சுமண், தீபக், பிரதோஷ், கார்த்திக், கேசவமூர்த்தி, நிகில் நாயக், ஜெகதீஷ், அனு, ரவி, மற்றும் ராஜு ஆகிய 11 கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவரான பிரதோஷ், ரேணுகாசாமியின் மரணம் குறித்து தர்ஷனிடம் தெரிவித்ததோடு, நிலைமையைச் சமாளிப்பதற்கு 30 லட்ச ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாகவும், பணத்தை ஒப்படைத்த பிறகுதான் கார்த்திக் மற்றும் அவரது குழுவினர் உடலை அப்புறப்படுத்தி காவல்துறையில் சரணடைய ஒப்புக்கொண்டதாகவும் விசாரணைக்குப் பிறகு மீதித் தொகையை வழங்குவதாக உறுதியளித்த பிரதோஷ் முதலில் அவர்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ள ரூ. 25 லட்சத்தை பிரதோஷ் வைத்திருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்,

மேலும், விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள், தர்ஷனின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும், குற்றம் சாட்டுவதற்கு ரூ. 5 லட்சம் தருவதாகக் கூறப்பட்டதாகவும், அவர்களின் சட்டச் செலவுகள் ஈடுசெய்யப்படும் என்று உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

Readmore: ’ஸ்டாலின் கூறியதால் தான் வாக்களித்தோம்’..!! ’பஸ் ஸ்டாண்ட் நாறிப் போய் கிடக்கு’..!! ஆய்வின்போது அதிர்ச்சியான கார்த்தி சிதம்பரம்..!!

Tags :
Advertisement