ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண்ணுக்கு தொடர்பு..? ரூ.50 லட்சம் கைமாறிய பணம்..? நடந்தது என்ன..? அதிர்ச்சி தகவல்..!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் வங்கிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது. கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர்.
கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுவதால் எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஆற்காடு சுரேஷின் தம்பி பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவரது 6 மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தற்போது ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், அவர்கள் அதிக அளவில் பணப்பரிவர்த்தனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு பெண் ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து ₹50 லட்சம் பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அந்த பெண் யார் என? தெரிந்து கொள்வதற்காக 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, அருள் மற்றும் திருமலை ஆகிய 3 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு கூடுதலாக 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் நீதிமன்றத்தை நாட இருப்பதாக கூறப்படுகிறது.
Read More : உடல் எடையை குறைக்க முயற்சிப்பவரா நீங்கள்..? இவ்வளவு ஆபத்து இருக்கா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!