முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை: "அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" - BSP தலைவர் மாயாவதி கடும் கண்டனம்…!

Armstrong murder: 'Government should take strict action' - BSP chief Mayawati strongly condemns...!
11:34 AM Jul 06, 2024 IST | Kathir
Advertisement

சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர், நேற்றிரவு அவரது வீட்டருகே ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் அவரை சூழ்ந்து வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்தார்.

Advertisement

இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ரங்கை அவரது ஆதரவாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் 8 பேர் சரணடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், செல்வபெருந்தகை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது குறித்து, அக்கட்சியின் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரின் பதிவில், "தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரும், மாநில கட்சித் தலைவருமான ஸ்ரீ கே. ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை அவரது சென்னை இல்லத்திற்கு வெளியே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமூகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உடனடியாக கடுமையான மற்றும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிகவும் சோகமான மற்றும் கவலையளிக்கும் இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, திரு ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தவும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் நாளை காலை சென்னை செல்ல திட்டமிட்டுள்ளேன். அமைதியையும் ஒழுங்கையும் பராமரிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று BSP தலைவர் மாயாவதி பதிவிட்டுள்ளார்.

Read More: BREAKING | ”அண்ணனின் பிறந்தநாளன்றே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்”..!! கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்..!!

Tags :
armstrong murderbsp leader mayawatimayawatiஆம்ஸ்ட்ராங் கொலைமாயாவதி கடும் கண்டனம்
Advertisement
Next Article