ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..!! தேசிய கட்சி பொறுப்பில் இருப்பவருக்கு தொடர்பு..? அடுத்தடுத்து வெளிவரும் ஷாக்கிங் தகவல்..!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் சிலரை கைது செய்தனர். கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு வந்து கொடுத்த முகிலன், விஜயகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரை கடைசியாக கைது செய்தனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த அப்பு, குமரா, ராஜேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், ராஜேஷ் வெளிநாடு தப்பியோடிய நிலையில், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் செந்திலுக்கு நன்கு பழக்கமானவர் என கூறப்படுகிறது.
ராஜேஷை கைது செய்யும் பட்சத்தில் இந்த வழக்கில் மேலும் சில உண்மைகள் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர். இவர்கள் மூவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதேபோல், டெல்லி வழியாக வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் தற்போது வெளிநாட்டில் இருப்பார் என சந்தேகிக்கப்படுகின்ற சம்பவ செந்தில் உள்ளிட்டோரை பிடிக்கவும் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த வழக்கில் ரவுடி சீசிங் ராஜாவையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் போலீசாருக்கு கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் தேசிய கட்சியில் பொறுப்பில் உள்ள சென்னையை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : சிறிய முதலீடு அதிக லாபம்..!! இந்த திட்டத்தில் லட்சங்களை சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?