ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..!! 10 நாட்கள்..!! 45 நிமிடங்கள்..!! வெளியான திடுக்கிடும் தகவல்..!!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 11 பேரையும் பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த விசாரணை மூலம், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் நோட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. கொலை செய்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே நிகழ்விடத்திற்கு வந்து கொலையாளிகள் காத்திருந்துள்ளனர். போலி நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி 5 இருசக்கர வாகனத்தில் வந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளனர்.
அதே நேரம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரின் வங்கிப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, ராமு என்கிற வினோத்தின் வங்கிக் கணக்குகளையும் காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அருள் என்பவரின் செல்போனில் உள்ள எண்களைக் கொண்டு விசாரணை நடத்தி, திருநின்றவூரைச் சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.