For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'யானையை சாய்ச்சுருங்க..!!' தாலியை கழட்டி சபதம்.. ஆற்காடு சுரேஷ் மனைவி வாக்குமூலம்..!!

Arkadu Suresh wife, who was absconding for a long time in the Armstrong murder case, has been arrested.
10:17 AM Aug 20, 2024 IST | Mari Thangam
 யானையை சாய்ச்சுருங்க      தாலியை கழட்டி சபதம்   ஆற்காடு சுரேஷ் மனைவி வாக்குமூலம்
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5ஆம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு மூளையாக இருந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி இந்த கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த பொற்கொடி, ஆந்திராவில் பதுங்கி இருந்த போது அவரை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இந்த நிலையில் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினரிடம் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் "ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அவருக்கு தொடர்பு இருப்பதாக எனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. இதனால் அவரை கொலை செய்ய வேண்டும் என நான் சபதம் எடுத்தேன். ஒரு பெண்ணாக என்னால் எதையும் செய்ய முடியாது. எனவே எனது கணவரின் தம்பி பாலுவை அழைத்து பேசினேன். அவர் என்னைவிட கோபத்தில் இருந்தார்.

ஆனால் அவரிடம் பணம் இல்லை.. இதை அடுத்து எனது கழுத்தில் கிடந்த நகை வீட்டில் இருந்து நகை உள்ளிட்டவற்றை விற்று ஒரு லட்சத்தை கொலைக்கான ஆரம்ப வேலைகளுக்கு பயன்படுத்த சொன்னோம். பழியாகவும், ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் மீது கோபத்தில் இருந்த அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றினர்" என கூறியுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை எதிரிகள் யானை (பிஎஸ்பி சின்னம்) என்றே குறிப்பிட்டு வந்தனர்.

Read more ; Airpods பயன்படுத்துவதால் இவ்வளவு ஆபத்தா? உஷாரா இருங்க..!!

Tags :
Advertisement