முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குரூப் 4 தேர்வை இத்தனை லட்சம் பேர் எழுதவில்லையா..? ரிசல்ட், கவுன்சிலிங் எப்போது..? வெளியான குட் நியூஸ்..!!

According to TNPSC, 15.8 lakh candidates appeared for the Group 4 examination held at 7,247 examination centers across Tamil Nadu.
10:36 AM Jun 10, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில், 10ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதுவார்கள்.

இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர் - 108, இளநிலை உதவியாளர் - 2,604, தட்டச்சர் - 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர் - 445, தனி உதவியாளர், கிளார்க் - 3, தனி செயலாளர் - 4, இளநிலை நிர்வாகி - 41, வரவேற்பாளர் - 1, பால் பதிவாளர் - 15, ஆய்வக உதவியாளர் - 25, பில் கலெக்டர் - 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர் - 49, வன பாதுகாவலர், காவலர் - 1,177, இளநிலை ஆய்வாளர் - 1 ஆகிய 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்டது.

இந்தாண்டு குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் ஆனது. குரூப் 4 தேர்வு நேற்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பகுதி 1-ல் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. பகுதி 2-ல் பிரிவில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்கள் என 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதினர். சுமார் 4 லட்சம் பேர் குரூப் 4 தேர்வில் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். அதன்படி, குரூப்-4-ல் ஒரு பதவிக்கு 320 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் 'கட்-ஆப்' மதிப்பெண்கள் உயரும் என தேர்வர்கள் கூறினர். குரூப்-4 தேர்வுக்கான முடிவுகளை அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பையும், அதனைத்தொடர்ந்து கவுன்சிலிங்கையும் நடத்தி முடிக்க ஆயத்தமாகி வருகிறதாம்.

Read More : த.வெ.க.வின் முதல் பிரம்மாண்ட மாநாடு..!! எங்கு நடக்கிறது..? புஸ்ஸி ஆனந்த் சொன்ன குட் நியூஸ்..!!

Tags :
examgroup 4 examHall ticketTNPSC
Advertisement
Next Article