இரவில் உங்கள் குழந்தைகள் தூங்க மாட்றாங்களா? இந்த உணவுகளை கொடுத்து பாருங்க.!!
குழந்தைகள் எப்போதுமே சுறுசுறுப்பானவர்கள். நாள் முழுவதும் ஓடுவது, ஆடுவது, பொம்மைகளுடன் விளையாடுவது என பொழுதைக் கழிக்கவே விரும்புகின்றனர். இரவோ, பகலோ குழந்தைகளை பொறுத்தவரை விளையாட்டிற்கு என தனி நேரம், காலம் கிடையாது. குறிப்பாக சில குழந்தைகள் இரவு நேரம் ஆனாலும் தூங்க மாட்டேன் என அடம்பிடிப்பார்கள். அம்மாக்கள் என்ன தான் அழகாக கதை சொல்லியும், பாட்டு பாடியும் தூங்க வைக்க முயன்றாலும் அதனை கேட்டுக்கொண்டிருப்பார்களோ தவிர தூங்க மாட்டார்கள். அப்படியிருக்க ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு தூக்கத்தை தரும் இரவு உணவை ஊட்டசத்தானதாகவும் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.
நமக்கு வயிறு முழுவதுமாக நிரம்பும் வரை உணவு எடுத்துக்கொள்ளும் போது நன்றாக தூக்கம் வரும். ஆனால் குழந்தைகளுக்கு இதற்கு நேர்மாறாக நடக்கிறது. குழந்தைகளுக்கு வயிறு நிரம்ப உணவு கொடுத்தாலும் சரியாக தூங்கமாட்டர்கள். எனவே குழந்தைகளுக்கு தூக்கத்தை தரும் உணவுகள் என்ன தரலாம் என்பதை குறித்து பார்க்கலாம்?
* பால் - பாலில் டிரிப்டோபன், கால்சியம், வைட்டமின் டி போன்ற சத்துகள் இருப்பதால் வெதுவெதுப்பாக பால் குடிக்கும் போது குழந்தைகளுக்கு தூக்கத்தை ஏற்படுத்தும்.
* பாதாம் - மலட்டோனின், செல்லோனின், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதை பாலில் கலந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு தூக்கத்தையும் தரும்.
* செர்ரி பழவகைகள் - செர்ரி பழ வகைகளில் ஏதாவது ஒன்றை குழந்தைகளுக்கு இரவு உணவில் சேர்த்து தரும்போது குழந்தைகள் அதிக அளவு விருப்பப்பட்டு சாப்பிடுவார்கள். இதனால் குழந்தைகளுக்கு நன்றாக தூக்கமும் வரும்.
* வாழைப்பழம் - வாழைப்பழத்தில் அயோடின், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின், டிரிப்டோபைன் போன்ற சத்துக்கள் இருப்பதால் இது குழந்தைகளுக்கு இரவு உணவாக தரும்போது நல்ல தூக்கத்தை ஏற்படுத்துகிறது.
* இரவு உணவை குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி கொடுக்காமல் பிடித்ததாக செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக அதிக இனிப்பாகவும், அதிக காரமாகவும் குழந்தைகளுக்கு உணவை கட்டாயமாக தரக்கூடாது. இது அவர்களின் தூக்கத்தை கெடுக்கும்.