கொலஸ்ட்ரால் பற்றி இனி கவலை வேண்டாம்..!! ஈசியா குறைக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!
அதிக கொலஸ்ட்ரால் குறிப்பாக அதிகப்படியான LDL கொலஸ்ட்ரால் இருப்பது இதய நோய் மற்றும் பக்கவாத அறிகுறிகளை உருவாக்கலாம் என்பதை நம்மில் பலருக்கும் தெரியும். கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது தமனிகளில் பிளேக் உருவாக காரணமாகி, அதனால் தமனிகள் சுருக்கப்பட்டு, முக்கியமான உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால் என்பது ‘சைலன்ட் கில்லர்’ என்று அழைக்கப்படுகிறது.
எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் நமது உயிரை ஆபத்தில் அழுத்தக்கூடிய சக்தி இந்த அதிக கொலஸ்ட்ராலுக்கு உண்டு. இருப்பினும், கொலஸ்ட்ராலை நினைத்து நாம் இவ்வளவு பயப்பட தேவையில்லை. எளிமையான ஒரு சில வாழ்க்கைமுறை மாற்றங்களையும், உணவு மாற்றங்களையும் செய்வதன் மூலமாகவே அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையை சமாளித்து விடலாம். அந்த வகையில், உங்களுக்கு உதவக்கூடிய ஒரு சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவு : பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரோட்டீன்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் சிவப்பு இறைச்சி, முழு கொழுப்பு டைரி ப்ராடெக்டுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சாச்சேரேட்டட் கொழுப்புகள் அதிகம் இருப்பதால் இவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும். மாறாக அவகாடோ பழங்கள், நட்ஸ், விதைகள், வஞ்சரம் மீன் போன்ற அன்சாச்சுரேட்டட் கொழுப்பு உணவுகளை சாப்பிடலாம்.
ஆரோக்கியமான உடல் எடை : உடல் எடை அதிகமாக இருந்தால் அது அதிக கொலஸ்ட்ரால் அளவுகளை ஏற்படுத்தலாம். எனவே, சரிவிகித உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலமாக ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் போன்ற பயிற்சிகளை வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது பின்பற்ற வேண்டும். இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும்.
நீரில் கரையும் நார்ச்சத்து : நீரில் கரையும் நார்ச்சத்து LDL கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ், பார்லி, ஆப்பிள், ஆரஞ்சு, பெர்ரி போன்ற பழங்கள் மற்றும் கேரட், ப்ரூசெல்ஸ் போன்ற காய்கறிகளில் நீரில் கரையும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது.
டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் : இவை LDL கொலஸ்ட்ராலை அதிகரித்து நல்ல கொலஸ்ட்ராலை குறைத்து விடும். இதனால், இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம். எனவே பொரித்த உணவுகள், பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட திண்பண்டங்களை தவிர்க்க வேண்டும். கடைகளில் நீங்கள் வாங்கும் திண்பண்டங்களின் லேபிள்களில் டிரான்ஸ் ஃபேட் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான சமையல் முறை : உணவுகளை பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக அவற்றை ஆவியில் வேக வைப்பது, லேசாக வதக்கி சாப்பிடுவது அல்லது கிரில் போன்ற ஆரோக்கியமான உணவு முறைகளை தேர்வு செய்ய வேண்டும். இது ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகளை குறைக்கும்.
மதுபானங்களை குறைத்துக் கொள்ளுங்கள் : அதிகப்படியாக மதுபானம் அருந்தும்போது, அது நமது உடலில் டிரைகிளிசரைடுகள் அளவுகளை அதிகரிக்கலாம். எனவே, மதுபானங்கள் அருந்தும்போது அளவை பின்பற்ற வேண்டும்.
புகைபிடிப்பதை தவிர்க்கவும் : புகைப்பிடிப்பது நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து ரத்த நாளங்களில் சேதத்தை ஏற்படுத்தும். இதனால், இதய நோய் ஏற்படலாம். எனவே, புகைப்பிடிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஒருவேளை அதற்கு நீங்கள் அடிமையாக இருந்தால், அதில் இருந்து எப்படி வெளியேறுவது என்பதை சுகாதார நிபுணர்களின் ஆலோசனை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
மன அழுத்தம் வேண்டாம் : நாள்பட்ட மன அழுத்தம் காரணமாக அதிகப்படியாக உணவு சாப்பிடுவது, புகைப்பிடிப்பது போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்களை நீங்கள் பின்பற்ற வாய்ப்புள்ளது. இது உங்களுடைய கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, தியானம், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சிகள், யோகா, இயற்கையோடு நேரத்தை செலவிடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.
Read More : Wow…!! ரூ.45,000 மதிப்புள்ள ஏசியை வெறும் ரூ.25,000-க்கு வாங்கலாம்..!! பிளிப்கார்டில் செம ஆஃபர்..!!