For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கருவுறாமல் தடுக்கும் Copper-T பயன்படுத்துறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க!!

07:35 PM May 14, 2024 IST | Baskar
கருவுறாமல் தடுக்கும் copper t பயன்படுத்துறீங்களா  கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க
Advertisement

ஓரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் Copper T-யை பொருத்திக்கொள்கின்றனர். பெண்கள் கருவுறாமல் தடுக்க கருத்தடை வளையமான இந்த Copper-T பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது.

Advertisement

தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே காப்பர் டி பயன்படுகிறது. காப்பர்-டி பொருத்திக்கொள்வது பாதுகாப்பானதா? இவை எப்படி பொருத்தப்படுகிறது. எவ்வளவு நாட்கள் இதன் பயன்பாடு இருக்கும்.என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காப்பர்-டி பொருத்தப்படும் முறை:

பொதுவாக காப்பர் டி குறித்து ஒரு தவறுதலான புரிதல்தான் பெண்கள் அனைவருக்குமே உள்ளது. ஆனால் இதுதான் கருதடைக்கு ரொம்ப ரொம்ப நல்லது. சிறந்ததும் கூட. குடும்பக்கட்டுபாடு செய்ய விரும்பும் பெண்கள் முதலில் இந்த காப்பர் டி-யை தேர்வு செய்வது நல்லது என்றே பெரும்பாலான மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த காப்பர் டி செம்பால் ஆனது. இதன் கீழ்ப்புறத்தில் நூல் மாதிரி அமைப்பு காணப்படும். இந்த நூல் போன்ற அமைப்பானது இந்த காப்பர் டி-யை வெளியே எடுக்க உதவுகின்றது. இந்த காப்பர் டி ஆனது பெண்ணின் கர்ப்பப்பையில் மருத்துவர்களால் பொருத்தப்படும். ஆகவே இதுதான் பெண்ணின் கருப்பையில் உள்ள இந்த காப்பர் டி கருத்தரித்தல் ஏற்படாமல் தடை செய்கிறது.

காண்டம்விட காப்பர்-டி சிறந்தது:

மேலும், ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையைச் சென்று சேராமல் இருப்பதை காப்பர்-டி உறுதி செய்கிறது. அதனால் இதன் மூலம் கருத்தரித்தல் ஏற்படாமல் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் கருவுற்றலை தடுக்க நிறைய மாத்திரைகள் இருந்தாலும், காண்டம் பயன்படுத்தினாலும் காப்பர் டி தான் சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த காப்பர் டி-யை ஒரு முறை போட்டுக் கொண்டால் மீண்டும் மாற்ற தேவையில்லை. இது 3 வருடம், 5 வருடம் ஏன் 10 வருடத்திற்கு ஒரு முறை மாற்றும் வசதிகள் உள்ளது. அதனால் அதுவரைக்கும் உங்களுக்கு எந்தவிதமான பிரச்னைகளும் இருக்காது. ஆனால் மிக முக்கியமானது வருடத்திற்கு ஒருமுறையாவது இந்த காப்பர் டி சரியாக உள்ளதா என்று மருத்துவரிடம் சோதனை செய்துக்கொள்வது நல்லது.

Read More: அதிர்ச்சி!… முன்கூட்டியே மாதவிடாய் நிறுத்தம்!… மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்!

Advertisement