மூட்டு வலியால் எந்த வேலையுமே செய்ய முடியவில்லையா..? இந்த 2 பொருள் போதும்..!! வீட்டிலேயே அற்புதமான மருந்தை தயாரிக்கலாம்..!!
தற்போதைய காலகட்டத்தில் பலரும் அவதிப்பட்டு வரக்கூடிய உடல் வலிகளில் முக்கியமான ஒன்று மூட்டு வலி. மூட்டு வலி வந்தாலே எந்த வேலையும் செய்ய முடியாது. ஒரு சிலருக்கு காலையில் எழும்பொழுது இந்த மூட்டுகளில் வலி ஏற்பட்டு அந்த நாளை மோசமானதாக்கிவிடும். முன்பெல்லாம் பெரியவர்களுக்கு ஏற்பட்டு வந்த இந்த மூட்டு வலி இப்பொழுது இளம் வயதினருக்கும் ஏற்பட்டு தொல்லையை கொடுக்கிறது.
ஆனால், இப்படி ஏற்படக்கூடிய உங்களுடைய மூட்டு வலியை வீட்டில் இருக்கக்கூடிய எளிய பொருள்களை வைத்தே சரிசெய்யலாம். அதாவது, உங்களுடைய மூட்டுகளில் ஏற்படக்கூடிய வலியை போக்கக்கூடிய அந்த அற்புதமான இயற்கை பொருள் தான் சுக்கு மற்றும் பால். சுக்கு உடலில் ஏற்படக்கூடிய வலியை மிக வேகமாக குணமாக்க கூடிய ஒரு அற்புதமான பொருள்.
செய்முறை :
* முதலில் சுக்குடன் சிறிதளவு பால் சேர்த்து அதை மையாக அரைக்க வேண்டும்.
* பிறகு, இந்த கலவையை நன்றாக சூடாக்கிக் கொள்ள வேண்டும்.
* சூடான இந்த கலவையை இளம் சூடாக வரும் வரை வைத்திருந்து, அதை உங்களுடைய கை மற்றும் கால் மூட்டுகளில் வலி இருக்கக்கூடிய பகுதிகளில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
* தொடர்ந்து நீங்கள் இப்படி செய்து வரும் பொழுது உங்களுடைய கை, கால் மூட்டுகளில் ஏற்படக்கூடிய வலி விரைவில் குணமாகும்.
Read More : ”கண்டிப்பா நீங்க வரணும்”..!! திடீரென விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!