டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உஷார்..!! 3 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்..!!
பெரும்பாலான மக்கள் காலை எழுந்ததும் டீ குடிக்காமல் இருக்க மாட்டார்கள். அதிலும். சிலர் டீயுடன் பிஸ்கட் தொட்டு சாப்பிட்டால் தான் திருப்தி அடைவார்கள். ஆனால், டீயுடன் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமென்றே மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். மேலும், இதனால், பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர். டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பு, இரத்தச்சர்க்கரை அதிகரிப்பு உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை வருமாம்.
இந்நிலையில் தான், 3 வயது பெண் குழந்தை டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிட்ட போது மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி குருபராஜ கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி அமுலு. குறவர் இனத்தை சேர்ந்த இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்தக் குழந்தை ஏற்கனவே இரண்டு நாட்களாக உடல்நலக்குறைவால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில், குழந்தைக்கு டீயில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிடக் கொடுத்த போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனே குழந்தையை கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர்.
அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த குழந்தைக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் கூறியுள்ள நிலையில், மூச்சுத்திணறலே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More : மாதந்தோறும் ரூ.30,000 சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!