சுவாசப் பிரச்சனையால் அவதியா..? ஏலக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க..!! சூப்பர் ரிசல்ட்..!!
சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஏலக்காயை உணவோடு சேர்த்துக் கொள்ளுவதால் Oxygen ஏற்றத்தில் நல்ல மாற்றம் இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏலக்காய் அனைத்து வகையான உணவுக்கும் பயன்படுத்தப்படுவதோடு ஆயுர்வேத மருந்தாகவும் காலகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல நன்மைகள் நிறைந்துள்ள ஏலக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதையும், இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதையும் பார்ப்போம்.
உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏலக்காய் ஒரு சிறந்த தீர்வு. ஆக்ஸிஜன் ஏற்றம் குறைந்தளவில் உள்ளவர்களுக்கு ஏலக்காய் உணவவோடு சேர்த்துக் கொள்வதால், ஆக்ஸிஜன் ஏற்றத்தில் நல்ல மாற்றம் இருப்பதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இது புற்றுநோய்க்கு எதிராக போராடும். அதுமட்டுமின்றி, புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு எதிராகவும் அது செல்களில் ஏற்படுத்தும் தாகத்திற்கு எதிராகவும் செயல்படுகிறது . வைட்டமின் சி யசினமைட், ரிபோபிளவின் போன்ற சத்து பொருட்கள் காணப்படுகிறது.
ஏலக்காயை பயன்படுத்தும் முறை :
ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது தேநீரில் போட்டு குடிக்கலாம். ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் ஏலக்காயை எண்ணெயில் போட்டு கலந்து உள்ளே இழுக்கலாம். சளி, காய்ச்சல் போன்ற நேரங்களில் ஏலக்காய் சேர்த்து தேநீர் அருந்துதல் சிறந்த மருந்தாகும். தேநீரோடு ஏலக்காய் சேர்ப்பது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். வாய் துர்நாற்றதை நீக்க ஏலக்காயை உணவிற்கு பின் மெல்லுதல் துர்நாற்றத்தை குறைக்கும். ஒரு நாளைக்கு 2 ஏலக்காய்களே போதுமானது எல்லா நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது.